2011/01/27

இணையம் மூலம் போட்டோ டிசைன்

இணையம் மூலம் போட்டோ டிசைன் செய்துகொள்ளலாம்


இதை நீங்கள் 1 வது நபராக வாசிக்கிறீர்கள்
இன்றைய பதிவில் போட்டோக்கள் விதவிதமான தோற்றங்கள் கொண்டு வருவதை பற்றிப்பார்க்கலாம். இதற்காக தனியே சாப்ட்வேர்கள் ஏதும் தேவையில்லை. இணைய இணைப்பு இருந்தால் போதுமானது. நீங்கள் டிசைன் செய்ய விரும்பும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் டிசைன் செய்ய இங்கு செல்லவும். உங்களுக்கு கீழ்கண்ட தளம் தோன்றும்.அதில்
Canvas Tiles Photo Effect
Film Strip Photo Effect
Motivational Posters
Photo Circles Effect
Pixel Photo Frame
Postage Stamp Photo Effect
Star Dust Photo Effect
Swirl Photo Frame
Wall Painting Photo Effect
Whirl Photo Effect 
போன்ற எபெக்ட் கள் உள்ளது. இதில்  ஏதாவது ஒரு டிசைனை தேர்வு செய்து பின்னர் உங்கள் புகைப்படம் இருக்கும் இடத்தை தேர்வு செய்து Upload கொடுங்கள். சில நிமிடங்கள் காத்திருந்தபின் நீங்கள் தேர்வு செய்த டிசைனில் படம் வருவதை காணலாம்.
இதில் மொத்தம் 42 எபெக்ட்கள் உள்ளது.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.எந்த டிசைன் வேண்டுமோ அதை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தின் ப்ரிவியு பாருங்கள்.
இதில் உள்ள ப்ரேம் டிசைனில் விதவிதமான பூக்கள் டிசைன்கள் உள்ளது். தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
முதலில ஓரு படம் நாம் தேர்வு செய்தால் போதுமானது். அதன் மூலமே மற்ற எல்லா டிசைன்களையும் நாம் ப்ரிவியு பார்த்துக்கொள்ளலாம் மேலும் அதில அளவினை மாற்றுவது - திருப்புவது - செய்துகொள்ளலாம். ஒவ்வொரு டிசைனையும் தனியே பதிவிறக்கி சேமித்தும் கொள்ளலாம். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன். பயன்படுத்திப் பாருங்கள் கருத்தினை கூறுஙகள்.
வாழ்க வளமுடன்.
 
 

அனைத்துவிதமான Photo களையும் திருத்த


சில போட்டோக்கள் சில சாப்ட்வேர்களில்தான் ஓப்பன ஆகும். நம்மிடம் PSD பைல் இருக்குமானால் அது போட்டோஷாப் பில் தான் ஓப்பன :ஆகும். ஆனால் இந்த சாப்ட்வேரில் PSD உட்பட அனைத்து பார்மெட் படங்களும் ஓப்பன ஆகின்றது.2 எம்.பி்.க்கும் குறைவான இந்த சாப்ட் வேரை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள்கணிணியில் இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் கீழ்புறம் பார்த்தீர்களேயானால் சின்ன சின்ன மெனுக்கள் வரிசையாக இருக்கும்.அதில் உள்ள 13 ஆவது மெனுவினை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதிலிருந்து புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள். நீங்கள் தேர்வு செய்த புகைபடத்தின் போல்டரில் உள்ள அனைத்து படங்களையும் பார்க்க தம்ப்நெயில் வசதி உள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இந்த மெனு கிளிக் செய்ய உங்களுக்கு படம் கீழ்கண்டவாறு வரும்.
இதிலிருந்து தேவையான புகைப்படங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.மேலும் படத்தை திருப்பும் வசதியும் உள்ளது. அதுபோல் அதை ரீ-டச்சிங் செய்யும் வசதி உள்ளது இதன் மற்றும் ஒரு சிறப்பு.
இதில் உள்ள ஒன்பதாவது மெனுவினை கிளிக் செய்ய உங்களுக்கு இடதுபுறம் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் உள்ள செட்டிங்ஸ் டேப்பில் படத்தின் அளவு மாற்றுதல் - கண்ணாடி பிம்பம் கொண்டுவருதல் தேவையான அளவு வெட்டுதல் போன்ற டூல்கள் உள்ளது.இதற்கு அடுத்து உள்ள டேப்பில் படத்தின் ஓளி அளவினை மாற்றும் வசதி உள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதைப்போல் இதில் பில்டர் வசதி உள்ளது .இதை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.படத்தில் வேண்டிய பில்டர் வசதி செய்து ப்ரிவியு பார்தது கொண்டு தேவைபட்டால் சேமிதது - பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
 சாதாரண படம் கீழே:-
பில்டர் எபெக்ட் கொடுத்தபின் வந்த புகைப்படம் கீழே:-
                                        வாழ்க வளமுடன்.
 
 
 

விதியை மதியால் வெல்லலாமா?

விதியை மதியால் வெல்லலாமா?, அறிவுதான் கடவுள்.


இதை நீங்கள் 1 வது நபராக வாசிக்கிறீர்கள்

கடவுள்,
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே எதை எதை எல்லாம் பார்த்து பயந்தானோ அவற்றை எல்லாம்  வணங்கி வந்தான் இந்த வணக்கமுறை பல மாற்றங்களுக்கு பின்பு மதங்கள் என உருவாகியது அன்றில் இருந்து இன்றுவரை கடவுள் இருக்கு என்று சொல்லுபவர்களும் சரி இல்லை என்று சொல்பவர்களும் சரி இத்தனை நூற்றாண்டாக எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை காரணம் பல அழிவுகளையும், பல பிரச்சனைகளையும் மனிதன் சந்திக்கும் பொது மதங்கள் சொல்வது போல கடவுள் அவதாரம் எடுப்பார் எடுப்பார் என்று சொல்லி சொல்லியே காலம் போனதுதான் கடவுள் அவதாரம் வரவில்லை அவர்கள் பெயரை சொல்லி பிரேமானந்தா, நித்தியானந்தா  அதேநேரம் இந்த பிறப்பு ,இறப்பு மனிதனால் தடுக்கவும் முடியவில்லை இப்படியான பல விடயங்களுக்கு இன்னும் அறிவியலால் விளக்கம் சொல்லமுடியாத பட்சத்தில் கடவுள் இல்லை என்று சொல்பவர்களும்,இருக்கு என்று சொல்பவர்களும்   பலவினமானவர்களாகவே இருக்கிறார்கள் ......நிற்க

இந்த உலக வாழ்கையில் கடவுளின் ஆதிக்கம் இருக்க இல்லையா என்று கேட்டால் இல்லை(நேரடியாக இத்தனை நூற்றாண்டை எந்த உதவியாவது  யாருக்காகவும் கடவுள் செய்தார் என்பதுக்கு எந்த சம்பவமும் இல்லை ) ......... ஆனால் இந்த விதி என்றால் என்ன? மனித வாழ்வில் என்ன என்ன சம்பவங்கள் நடக்கவேண்டும் என்று எல்லா விடயங்களும் ஏற்கனேவே எழுதி வைக்கப்பட்டு விட்டது  என்பதா? கண்டிப்பாக இருக்க முடியாது , எல்லாவற்றையும் எங்களை கடவுள்  என்ற ஒருவன் செய்ய வேண்டும் என்று விதி வடிவில் எழுதி வைத்துவிட்டு பாவ புண்ணிய கணக்கு எப்படி போடா முடியும்??? இல்லை போனஜென்ம  பலனின் படி என்று நீங்கள் விளக்கம் சொல்லலாம் அப்படியானால் முதல் பிறவி என்றால் அவர்களுக்கு விதி என்று ஒன்று இல்லையா? அவர்களுக்கு முதல் ஜென்மம் இல்லையே? அப்படியானால் அவர்களுக்கு விதி எது?

அப்படியானால் இந்த விதியை மதியால் வெல்வது என்பது என்ன?
என்னை பொறுத்தவரையில் இந்த விதி என்பது கோட்பாடுகள் அதாவது சூரியனை பூமி சுற்றுகிறது (சூரியனின் ஈர்ப்பு) ,பூமியை சந்திரன் சுற்றுகிறது(புவி ஈர்ப்பு)  இவை இயற்கை கோட்பாடுகள் இதில் இந்த புவி  ஈர்ப்பு என்பதை எடுத்துகொள்வோம், ஒரு கல்லை மேலே போட்டால் அது  கிழே விழும் இது விதி அதாவது அந்த கல்லு விழும் இடத்தில் எங்கள் தலை இருந்தால் அது தலையில்தான் விழும் இந்த விதியை மேலே போன கல்லு கிழேதான் வரும் அதுவும் சரியாக தலைக்கு மேலே போடுவதால் அது தலையில்தான் விழும் என்று மதிகொண்டு(அறிவு) விலகி நின்றாள் அந்த கல்லு தலையில் விழுவதை தவிர்க்கலாம். இப்படி வாழ்வில் எல்லா விடயங்களுக்கும் ஒவொரு உண்மைத்தன்மை உண்டு அதில் சில எங்களுக்கு தெரிந்ததால் விலகி நிக்கிறோம் தெரியாதவற்றை தலையில் வாங்கிக்கொள்கிறோம் அதன் பின் எங்கள் அறியாமையை நேரப்பிழை, காலப்பிழை ,ராசி சரியில்லை  அப்படி இப்படி என்று உங்கள் வாழ்கையை கேள்விக்குறி ஆக்காதிர்கள் .............இங்கு அறிவுதான்

மகளை தந்தையே… !!

இருட்டு அறையில் 24 வருடங்கள் !! மகளை தந்தையே… !!


இதை நீங்கள் 1 வது நபராக வாசிக்கிறீர்கள்

( கொடூரத்தை தனக்குள் புதைத்திருந்த வீடு )
இப்படிக் கூட உலகில் மனிதர்கள் இருக்கின்றார்களா எனுமளவுக்கு உறைய வைக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. எனினும், இந்தச் செய்தி போல உறைய வைத்த செய்தியை சமீபகாலமாக நான் கேள்விப்பட்டதே இல்லை.
இருபத்து நான்கு வருடங்களாக தனது மகளை (எலிசபெத்) குகை போன்ற வெளிச்சமே நுழைய முடியாத அறைகளில் பூட்டி வைத்து பாலியல் வன்முறை செய்திருக்கிறான் ஒரு தந்தை.
சின்னச் சின்ன குறுகலான குகைகள் போன்ற ஐந்தடி உயரமே உள்ள, முழுவதும் அடைக்கப்பட்ட உறுதியான அறைகளில் அவள் அடைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறாள். ரகசிய அறை மூலம் தந்தை அந்த அறைகளுக்குச் செல்ல முடியும். அதற்கான நவீன கதவையும், அதைத் திறக்கும் சங்கேத எண்ணையும் யாருக்கும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்த அந்த கொடூரமான தந்தைக்கு இப்போது வயது 73.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது வியன்னாவிலிருந்து 80 மைல் தொலைவில் இருக்கும் ஆஸ்திரியாவிலுள்ள ஆம்ஸெட்டன் பகுதியில்.
எலிசபெத் பதினெட்டு வயது சுட்டிப் பெண்ணாக இருந்தபோது அவளுடைய கைகளை கட்டி ஒரு இருட்டு அறைக்குள் பூட்டி அவளை பலாத்காரம் செய்த தந்தை, அவள் வீட்டை விட்டு ஓடி விட்டதாக நாடகமாடி எல்லோரையும் நம்ப வைத்திருக்கிறான்.
அதன்பின் அவளைக் கொண்டே, “ என்னைத் தேடாதீர்கள் “என்று ஒரு கடிதம் எழுதி வாங்கி அதை அனைவரிடமும் காண்பித்து இருட்டு வாழ்க்கையை அவளுக்கு நிரந்தரமாக்கியிருக்கிறான்.
அந்த மனிதாபிமானமற்ற விலங்கு, கடந்த இருபத்து நான்கு வருடங்களாக அவளை தொடர்ந்து பாலியல் கொடுமை செய்து எட்டு குழந்தைகளுக்குத் தாயாக்கி இருக்கிறது. வெளிச்சமே இல்லாத இருட்டு அறைகளில் அவள் தாய்மை நிலையில் பிரசவத்தை எதிர்கொள்ளும் கொடுமையும் நிகழ்ந்திருக்கிறது.

அவற்றில் ஒருமுறை பிறந்த இரட்டைக் குழந்தைகள் மருத்துவ கவனிப்புகள் இன்றி பிறந்த சில நாட்களிலேயே இறந்திருக்கின்றன.
தாயுடன் மூன்று குழந்தைகளையும் சன்னலோ, கதவோ, வெளிச்சமோ, வெளிக்காற்றோ இல்லாத அந்த அறைகளில் அடைத்து வைத்திருந்த கொடூர தந்தை மூன்று குழந்தைகளை தன்னுடன் வைத்து வளர்த்தியிருக்கிறான்.
வீட்டு வாசலில் பச்சைக் குழந்தையைப் போட்டு விட்டு மகள் கைப்பட “ எனக்கு வாழ வசதி இல்லை இந்தக் குழந்தையைக் காப்பாற்றுங்கள் “ என ஒரு கடிதம் எழுதி வாங்கி அதையும் குழந்தையுடன் வாசலில் வைத்து விட்டு மனைவியையும் ஏமாற்றி, சுற்றியிருப்பவர்களையும் ஏமாற்றியிருக்கிறான்.

(பதினெட்டு வயதில் எலிசபெத் vs மகள் மோனிகா வயது 14 )
அவனுடைய மனைவி, அதே வீட்டின் மாடியில் இந்த கொடுமைகள் குறித்த எந்த ஒரு அறிவும் இன்றி கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளாக பேரன், பேத்திகளுடன் தனது வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறார் என்பது வலியை இன்னும் அதிகப்படுத்துகிறது.
அறைகளில் தாயுடன் அடைபட்டுக் கிடந்த மூத்த மகள் கெர்ஸ்டினுக்கு, தீமையில் நிகழ்ந்த நன்மையாக, உடல் நிலை மிகவும் சீர் குலைந்திருக்கிறது. 19 வருடங்களாக் ஒரு சொட்டு சூரிய ஒளியைக் கூட காணாத அவளை தந்தை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றிருக்கிறான். அங்கே தான் இந்த பதற வைக்கும் உண்மை வெளி வந்திருக்கிறது.
மகளை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுமெனில் தாயிடமிருந்து சில தகவல்கள் பெற வேண்டுமென மருத்துவமனை வற்புறுத்தியதால் அந்தக் கொடூரத் தந்தை தனது மகளை இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் அறைச் சிறையை விட்டு வெளியே கொண்டு வந்திருக்கிறான்.
மருத்துவமனையில் உடலும் மனமும் பாதிக்கப்பட்ட நிலையில் தந்தையின் கொடுமைக்கு ஆளான மகள் சொன்ன கதைகளைக் கேட்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. இனிமேல் தந்தையை நான் பார்க்கவே கூடாது எனும் கதறல் விண்ணப்பத்துக்கு உறுதி அளித்த பிறகே அந்த 42 வயது மகள் பேசியிருக்கிறார்.
11 வயது முதலே தன்னிடம் பாலியல் தவறுகள் செய்து வந்த தந்தை 1984 ஆகஸ்ட் 28ம் தியதி கைகளில் விலங்கிட்டு அறைகளுக்கு இழுத்துச் சென்றபோது இத்தனைக் கொடுமைகளைச் சந்திப்போம் என கனவிலும் நினைக்கவில்லை என்ற அவளுடைய கதறல் மனிதத்தின் மேல் அவமானமாய் படிகிறது.

பதினெட்டு வயதான ஸ்டீபன், ஐந்து வயதான பெலிக்ஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 19 வயதான கெர்ஸ்டன் மற்றும் அந்தக் குழந்தைகளின் தாய் அனைவருமே உளவியல் ரீதியான அழுத்தத்தில் இருப்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
1993, 1994 மற்றும் 1997 களில் மூன்று குழந்தைகளை (அலெக்சாண்டர், மோனிகா, லிசா) கொடூரத் தந்தையே வாசலில் போட்டு விட்டு மகள் போட்டு விட்டுச் சென்றதாக எடுத்து வளர்த்தியிருக்கிறான்.
அந்த பரபரப்பான சாலையும், சுற்றியிருக்கும் மக்களும் பேரன் பேத்திகளுடன் வாழ்ந்த இந்த வயதானத் தம்பதியினரின் பின்னால் இப்படி ஒரு கொடூரத்தின் உச்சம் புதைந்து கிடக்கும் என தங்களது கனவின் ஓரத்திலும் கருதியிருக்க வாய்ப்பே இல்லை.

அறைகளில் அடைபட்டுக் கிடந்த எலிசபெத்தின் ஐந்து சகோதர சகோதரிகளும் தங்கள் சகோதரிக்கு இப்படி ஒரு கொடூரமான நிலையில் இருப்பதைத் தெரியாமல் வசதியான இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
தினமும் தனது பேரன், பேத்திகளை பள்ளிக்கூடத்திற்கு கூட்டிச் செல்லும் வயதான பாட்டிக்கு தனது மகள், தான் குடியிருந்த வீட்டிலேலே இப்படி ஓர் அதிர்ச்சி வாழ்க்கையை வாழ்ந்து வந்தது தெரிந்திருக்கவில்லை.

புனிதத்தின் உயர்நிலையில் வைத்து நாம் போற்றும் தந்தை மகள் உறவில் இத்தகைய கொடூரம் நிகழ்ந்திருப்பது உயிரை உறைய வைக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது மகள் மீது தந்தை கொள்ளும் பலாத்கார நிகழ்வுகள் அவமானச் சின்னங்களாக முளைத்தெழுந்தாலும், 24 வருடங்களாக இருட்டு அறைகளில், குழந்தைகளோடு ஒரு அடிமையை விட அதிகபட்ச கேவலமான வாழ்க்கையை வழங்கியிருக்கும் தந்தை ஒட்டு மொத்த மனித குலத்தின் அவமானச் சின்னமாக உருவெடுத்திருக்கிறான் என்று தான் சொல்ல வேண்டும்.
மரணத்தை நோக்கிய பயணத்தில் முதுமையையும் கடந்து 73 வது வயதில் இருக்கும் கொடூரத் தந்தையை சட்டம் எப்படி தண்டித்தாலும் அது குறைவானதாகவே இருக்க முடியும். உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும், வாழ்வின் முக்கியமான வருடங்கள் அனைத்தையும் தொலைத்துவிட்ட மகளுக்கு இனி வரும் காலமேனும் சற்று நிம்மதியான வாழ்க்கை அமைய பிரார்த்திப்பதை விட வேறென்ன செய்ய முடியும் நாம் ?

ஹிட்லர்-வாழ்வும்

ஹிட்லர்-வாழ்வும் மரணமும்


இதை நீங்கள் 1 வது நபராக வாசிக்கிறீர்கள்
1945 ஏப்ரல் 30-ந்தேதி இரவு 9 மணி. "இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியும், அவர் மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது. ரேடியோச் செய்தியை ஹிட்லர் நேரடியாகக் கேட்டார். காதலியுடன் முசோலினியின் முடிவு, ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது. அன்றிரவு 12 மணி, பெர்லின் நகரம் முற்றிலுமாக ரஷியப்படைகள் வசமாகிவிட்டது என்றும், எந்த நேரத்திலும், சுரங்க மாளிகை தகர்க்கப்படலாம் என்றும், ஹிட்லருக்குத் தகவல் கிடைத்தது. ஹிட்லரின் முகம் இருண்டது. மவுனமாக எழுந்து, தன் தோழர்களுடன் கை குலுக்கினார்.

1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தார். ஹிட்லரின் முடிவைக் கேட்டு, ஈவாபிரவுன் திடுக்கிடவில்லை. "வாழ்விலும் உங்களுடன் இருந்தேன். சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்து கொள்வேன்" என்றாள்.

பிறகு தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து, "நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப்போகிறோம். நாங்கள் இறந்தபின், எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துச் சாம்பலாக்கி விடுங்கள். எங்கள் அறையில் உள்ள கடிதங்கள், டைரிகள், என் உடைகள், என் பேனா, கண்ணாடி முதலிய பொருள்களை சேகரித்து, ஒன்று விடாமல் எரித்துவிடுங்கள்" என்று கூறிவிட்டு, மனைவியையும் அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றார். அறைக்கதவு சாத்தப்பட்டது. வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. ஹிட்லரும் ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும், தளபதிகளும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி: ஒரு சோபாவில், உட்கார்ந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல். அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது. அதன் நுனியிலிருந்து புகை வந்து கொண்டிருந்ததால், அவர் சற்று நேரத்துக்கு முன்தான் தன்னைச் சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது. அவருடைய வலது காதுக்கு கீழ் அரை அங்குல அளவுக்கு துவாரம் விழுந்து, அதிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.

hitler1.jpg


ஹிட்லர், துப்பாக்கி முனையை வாய்க்குள் வைத்து சுட்டதால்தான், குண்டு காதுக்கு அருகே துளைத்துக் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்று தளபதிகள் கருதினார்கள். ஹிட்லரின் வலது கரம் ஒரு புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி இருந்தது. அந்தப்படம், ஹிட்லரின் தாயாரின் புகைப்படம். தாயின் மீது ஹிட்லர் கொண்டிருந்த பாசத்தை எண்ணி அவர் நண்பர்கள் கண்ணீர் சிந்தினர். ஹிட்லர் உடல் இருந்த சோபாவில் சாய்ந்தபடி பிணமாகியிருந்தாள் அவருடைய மனைவி ஈவா. வெள்ளைப் புள்ளிகளோடு கூடிய கருநீல "மாக்சி" உடை அணிந்திருந்தாள். அவள் உடல் நீலம் பாய்ந்திருந்தது. எனவே அவள் சயனைடு விஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.

ரஷ்யாவின் பீரங்கி தாக்குதலால் பொடிபொடியான ஹிட்லரின் பாதாள மாளிகை ஹிட்லர் உடலையும், ஈவா உடலையும் உதவியாளர்கள் ஒரு கம்பளிப்போர்வையில் சுற்றினார்கள். பிறகு அந்த உடல்களை அந்த அறையிலிருந்து தலைமைச் செயலகத் தோட்டத்திற்கு தூக்கிக் கொண்டு போனார்கள். அங்கே, பெட்ரோலையும், எரிவாயுவையும் கொண்டு இரு உடல்களையும் எரித்துச் சாம்பலாக்கினார்கள். சில மணி நேரம் கழித்து அங்கு வந்த ரஷியப்படையினர் ஹிட்லரைக் காணாமல் திகைத்துப் போனார்கள். அவர் தற்கொலை செய்து கொண்டதும், பிணம் எரிக்கப்பட்டதும் பிறகுதான் தெரிந்தது. எனினும் ஹிட்லர் சாகவில்லை, தலைமறைவாக இருக்கிறார் என்று நீண்ட காலம் நம்பியவர்கள் ஏராளம்!

ஹிட்லர் ஈவு இரக்கமற்ற கொடியவராக இருந்தாலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் சில நல்ல குணங்களும் இருந்தன. ஹிட்லர், குழந்தைகளிடமும், பிராணிகளிடமும் அன்பு கொண்டவர். மது அருந்த மாட்டார். புகை பிடிக்க மாட்டார். சைவ உணவே சாப்பிடுவார்.

உலகப் போரின்போது, ஹிட்லரின் பிரசார பீரங்கியாகச் செயல்பட்டவர், கோயபல்ஸ். 1897-ல் பிறந்த கோயபல்ஸ், 8 பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயின்றவர். தத்துவத்தில் "டாக்டர்" பட்டம் பெற்றவர். சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்கவர். 1929-ல் இவர் ஹிட்லர் மந்திரி சபையில் பிரசார மந்திரியானார். உலகப்போரின்போது, புதுப்புது உத்திகளைக் கையாண்டு, ஹிட்லரின் பெயர் உலகம் முழுவதும் பரவச் செய்தார். (போரில் ஹிட்லர் தோல்வியைச் சந்தித்தபோதும், அவர் வெற்றி பெற்று வருவதாக பிரசாரம் செய்தார். இதன் காரணமாக பொய் பேசுபவர்களை "கோயபல்ஸ்" என்று வர்ணிக்கும் வழக்கம் வந்தது.) ஹிட்லர் மீது இவர் கொண்டிருந்த பக்திக்கு அளவே இல்லை. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதற்கு மறுநாள், கோயபல்ஸ் தன் மனைவியுடனும், 6 குழந்தைகளுடனும் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகள் 2 முதல் 12 வயது வரை உள்ளவர்கள்.
 

உடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய்

உடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள்(18+)


இதை நீங்கள் 2 வது நபராக வாசிக்கிறீர்கள்
தொழில்நுட்பங்கள் நமக்குள் இருக்கும் இடைவெளியை குறைக்கின்றன. வெளிநாடுகளில் இருப்பவர்களைக் கூட நேரில் கண்டு பேசும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அது தூரங்களை குறைத்து குறைத்து இப்போது படுக்கையறை வரை வந்துவிட்டது. அடுத்தவரின் படுக்கை அறையில், கடைகளில் துணி மாற்றும் இடத்தில் அவருக்கு தெரியாமல் வீடியோ எடுக்கும் அபாயம் பற்றி இப்போது தான் மெல்ல மெல்ல விழிப்புணர்ச்சி ஏற்பட்டுக் கொண்டருக்கிறது.

இப்படிப்பட்ட தருணத்தில் நாம் உடையணிந்திருந்தாலும் நம்மை நிர்வாணமாய் காணோளி பதிவு செய்யும் மென்பொருள்கள் வந்தால் நாம் என்னாவாவோம்?. நம்முடைய சுகந்திரம் எந்தளவு பரிபோகும்?. நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. ஆனால் இந்த மென்பொருள்கள் வந்துவிட்டதாக இணையம் பயமுறுத்துகிறது.
அதைப் பற்றிய இடுகைதான் இது.
ஐ போன் -

ஐ போனைப் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. கண்டிப்பாக உங்களுக்கு ஐபோனைப் பற்றி தெரிந்திருக்கும். ஒரு குட்டி கணினியாக கைக்குள் அடங்கி விடும் அதன் வரவேற்பினைக் கண்டு உலகமே பிரமித்திருந்தது.
நிர்வாணமாக காட்டும் மென்பொருள் -
ஐபோனில் இணையத்திலிருந்து அதற்கான மென்பொருள்களை தரவிரக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில் சில நிர்வாணமாக காட்டும் மென்பொருள்களும் அடங்கிவிடும்.
விளம்பரங்களில் இரண்டு மென்பொருள்களை காண முடிந்தது. ஒன்று ஐநேக்கிட், மற்றொன்று நியூட் இட்.
ஐநேக்கிட் ஆப்பில் ஐபோனின் மென்பொருள் என்று விளம்பரம் சொல்லுகிறது. ஆனால் ஆப்பில் ஐபோன் தளத்தில் எஸ்ரே மென்பொருள் மட்டும் கிடைக்கின்றது. இதைக் காணவில்லை.
அடுத்தது நியூட் இட். இந்த மென்பொருள் இணையத்திலேயே இலவசமாய் கிடைக்கிறது. தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும். இந்த இணைப்பைக் கொடுக்க காரணம், நீங்கள் பயன்படுத்தி அதன் உண்மைத் தன்மையை நிச்சயம் செய்து கொள்ளத்தான்.
எப்படிச் சாத்தியம் -

உங்கள் புன்னகையின் போது படம் பிடிக்கும் புகைப்படக் கருவிகளைக் கண்டிருக்கின்றீர்களா. அந்தக் கருவி உங்கள் முகத்தினை அறிந்து நீங்கள் சிரிக்கும் போது தானாகவே புகைப்படம் எடுத்துவிடும் தன்மையுடையது. அது போல இந்த மென்பொருளும் உங்களின் முகத்தினை அறிந்து கொண்டு, உங்கள் நிறம், பருமன் போன்றவற்றைக் கணக்கிட்டு போலியான உடலை உங்களின் தலையுடன் இணைத்துவிடலாம் என்கின்றனர் சிலர் பயனாளர்கள்.
அதிரவைக்கும் காணோளிகள் -
 


 



மானங்கெட்ட தமிழா

மானங்கெட்ட தமிழர்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!  


இதை நீங்கள் 1 வது நபராக வாசிக்கிறீர்கள்

மானங்கெட்ட செம்மொழி மாநாட்டிற்கு சென்ற தமிழர்களே! அதாவது இந்தியா செம்மொழி மாநாடு என்ற பெயரில் நடாத்தப்படும் ஈழத்தழிழர்களை அழித்ததை மறைப்பதற்கு திட்டம் போட்டு கருநா(ய்)நிதி நடாத்தும் செம்மொழி நாடகத்தில்...............அண்மையில் கருநா(ய்)நிதிக்கு  திரையுலகத்தில் நடாத்தப்பட்ட பாராட்டு விழாவிற்கும் இதற்கும் வித்தியாசம் எனக்குத்தெரியவில்லை............


கருநா(ய்)நிதியே நீ என்னதான் நாடகம் நடத்தினாலும் ஈழத்தழிழர்களின் அழிவையும் அதற்கு உன் பங்களிப்பையும் தழிழை நேசிக்கிற எந்த தழிழனும் மன்னிக்கவும் மாட்டான், மறக்கவும் மாட்டான்.........

நீ எல்லாம் என்ன தழிழன் தமிழக மீனவர்கள் என்ன உனக்கு பகடைக்காயா????????
அதை முதலில் நிறுத்து உன் திமிழ்நாட்டவனை கடலில் சிங்களவன் சுடுகிறான் அதற்கு நீ என்ன செய்தாய்?????????? தமிழனை காப்பாற்ற முடியாத உனக்கு எதற்கு அரியாசனம் ???????? செம்மொழி மாநாடு உன் குடும்பச்சொத்தா?????????? தமிழனை பதவிக்காகவும்............குடும்ப அரசியலுக்காகவும்( உன் குடும்பத்தை வேணுமென்னா கூட்டிக்கொடுடா.............)தமிழனைக்காட்டிக்கொடுத்த நாயே.............................


செம்மொழி மாநாட்டில பேசவந்த சில நாய்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் காக்கா பிடிக்கிறதும் அரசியல் பேசிறதும்.........செமக்காமடி இதற்கு சாலமன் ஐயா,லியோனி போன்ற நகைச்சுவையாளர்கள் தேவையேயில்லை...........

தமிழ் எண் வடிவங்கள்

பண்டைய தமிழ் எண் வடிவங்கள்


இதை நீங்கள் 1 வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழ் எண்கள்


* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)


தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்

ஏறுமுக எண்கள்
**************
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

இறங்குமுக எண்கள்
*****************
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்
----------------
நீட்டலளவு
**********
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்
************
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்
*****************
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு
*************
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு
*************
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி.