2011/01/27

உயிருடன் எரித்து கொலை

BREAKING HOT NEWS: கலெக்டர் உயிருடன் எரித்து கொலை; கடத்தல் கும்பலிடம் சோதனை நடத்தியபோது பயங்கரம்

நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தில் மாவட்ட கூடுதல் கலெக்டர்  மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் கடத்திய கும்பலை சுற்றி வளைத்து சோதனை நடத்தியபோது உயிருடன் தீ வைத்து கொளுத்தி கொன்ற கும்பல் தப்பி ஓடியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
நாசிக் அருகே மண்மத் அருகே பானிவாட் பகுதியில் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகவும், இதனை மாற்று பகுதிக்கு கடத்துவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பவாக அந்த மாவட்ட கூடுதல் கலெக்டர் யஸ்வந்த் சோனாவானே என்பவர் கடத்தல் நடக்கும் இடத்திற்கு சென்று சோதனையிட்டார்.
இந்நிலையில் அங்கு இருந்த கும்பல் கலெக்டர் சோனாவை அடித்து தாக்கியது. தொடர்ந்து மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இதில் கலெக்டர் சம்பவ இடத்திலேய கருகி பலியானார். இந்த உடல் சாம்பலாக அந்த இடத்திலேயே கிடக்கிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். அருகில் பஸ்ஸ்டாண்டும் உள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி கூட. மண்ணெண்ணெய் கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக