2011/01/27

இணையம் மூலம் போட்டோ டிசைன்

இணையம் மூலம் போட்டோ டிசைன் செய்துகொள்ளலாம்


இதை நீங்கள் 1 வது நபராக வாசிக்கிறீர்கள்
இன்றைய பதிவில் போட்டோக்கள் விதவிதமான தோற்றங்கள் கொண்டு வருவதை பற்றிப்பார்க்கலாம். இதற்காக தனியே சாப்ட்வேர்கள் ஏதும் தேவையில்லை. இணைய இணைப்பு இருந்தால் போதுமானது. நீங்கள் டிசைன் செய்ய விரும்பும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் டிசைன் செய்ய இங்கு செல்லவும். உங்களுக்கு கீழ்கண்ட தளம் தோன்றும்.அதில்
Canvas Tiles Photo Effect
Film Strip Photo Effect
Motivational Posters
Photo Circles Effect
Pixel Photo Frame
Postage Stamp Photo Effect
Star Dust Photo Effect
Swirl Photo Frame
Wall Painting Photo Effect
Whirl Photo Effect 
போன்ற எபெக்ட் கள் உள்ளது. இதில்  ஏதாவது ஒரு டிசைனை தேர்வு செய்து பின்னர் உங்கள் புகைப்படம் இருக்கும் இடத்தை தேர்வு செய்து Upload கொடுங்கள். சில நிமிடங்கள் காத்திருந்தபின் நீங்கள் தேர்வு செய்த டிசைனில் படம் வருவதை காணலாம்.
இதில் மொத்தம் 42 எபெக்ட்கள் உள்ளது.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.எந்த டிசைன் வேண்டுமோ அதை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தின் ப்ரிவியு பாருங்கள்.
இதில் உள்ள ப்ரேம் டிசைனில் விதவிதமான பூக்கள் டிசைன்கள் உள்ளது். தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
முதலில ஓரு படம் நாம் தேர்வு செய்தால் போதுமானது். அதன் மூலமே மற்ற எல்லா டிசைன்களையும் நாம் ப்ரிவியு பார்த்துக்கொள்ளலாம் மேலும் அதில அளவினை மாற்றுவது - திருப்புவது - செய்துகொள்ளலாம். ஒவ்வொரு டிசைனையும் தனியே பதிவிறக்கி சேமித்தும் கொள்ளலாம். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன். பயன்படுத்திப் பாருங்கள் கருத்தினை கூறுஙகள்.
வாழ்க வளமுடன்.
 
 

அனைத்துவிதமான Photo களையும் திருத்த


சில போட்டோக்கள் சில சாப்ட்வேர்களில்தான் ஓப்பன ஆகும். நம்மிடம் PSD பைல் இருக்குமானால் அது போட்டோஷாப் பில் தான் ஓப்பன :ஆகும். ஆனால் இந்த சாப்ட்வேரில் PSD உட்பட அனைத்து பார்மெட் படங்களும் ஓப்பன ஆகின்றது.2 எம்.பி்.க்கும் குறைவான இந்த சாப்ட் வேரை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள்கணிணியில் இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் கீழ்புறம் பார்த்தீர்களேயானால் சின்ன சின்ன மெனுக்கள் வரிசையாக இருக்கும்.அதில் உள்ள 13 ஆவது மெனுவினை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதிலிருந்து புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள். நீங்கள் தேர்வு செய்த புகைபடத்தின் போல்டரில் உள்ள அனைத்து படங்களையும் பார்க்க தம்ப்நெயில் வசதி உள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இந்த மெனு கிளிக் செய்ய உங்களுக்கு படம் கீழ்கண்டவாறு வரும்.
இதிலிருந்து தேவையான புகைப்படங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.மேலும் படத்தை திருப்பும் வசதியும் உள்ளது. அதுபோல் அதை ரீ-டச்சிங் செய்யும் வசதி உள்ளது இதன் மற்றும் ஒரு சிறப்பு.
இதில் உள்ள ஒன்பதாவது மெனுவினை கிளிக் செய்ய உங்களுக்கு இடதுபுறம் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் உள்ள செட்டிங்ஸ் டேப்பில் படத்தின் அளவு மாற்றுதல் - கண்ணாடி பிம்பம் கொண்டுவருதல் தேவையான அளவு வெட்டுதல் போன்ற டூல்கள் உள்ளது.இதற்கு அடுத்து உள்ள டேப்பில் படத்தின் ஓளி அளவினை மாற்றும் வசதி உள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதைப்போல் இதில் பில்டர் வசதி உள்ளது .இதை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.படத்தில் வேண்டிய பில்டர் வசதி செய்து ப்ரிவியு பார்தது கொண்டு தேவைபட்டால் சேமிதது - பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
 சாதாரண படம் கீழே:-
பில்டர் எபெக்ட் கொடுத்தபின் வந்த புகைப்படம் கீழே:-
                                        வாழ்க வளமுடன்.
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக